Wednesday, 16 May 2012

விந்தை மிக்க திருமண முறை ;

=>ராஜ கம்பளத்தார் என்று சொல்கின்ற அரச பரம்பரையினர் கரூர் , நாமக்கல் ,மதுரை , விருதுநகர், தேனீ , திண்டுக்கல் போன்ற இடங்களில் அதிகமாக வாழக்கூடியவர்கள் . இவர்களின் திருமண முறை உலகத்தவர்கள் வியக்கும் வண்ணம் நடக்கும் ..
 

=>பொதுவாக இரவு நேரங்களில் இவர்களின் திருமணம் நடக்கும் , திருமணத்தில் "தேவராட்டம் " கட்டாயம் நடக்கும் .. முக்கியமான ஒன்று "வரதட்சணை " கிடையாத ஒரே இனம் ..( இன்று வரதட்சணையால் பல திருமணம் நின்று விடும் நிலையில் , இவர்கள் அரச குடியினர் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வது அடுத்த இனத்தவர்களை வாய் பிளக்க செய்கிறது ..
 
=> திருமண செலவு முழுவதும் மணமகன் வீட்டினர் தான் செய்வர்
=>பெண் கொடுமை, வரதட்சணை , ஆண் ஆதிக்கம் என்பது எல்லாம் கம்பளத்து மக்களுக்கு கிடையவே கிடையாது . பெண்கள் இவ்வினத்தில் தெய்வமாக மதிக்க படுகிறார்கள் ..
 

=>இக்குலத்தில் பிறந்த பெண்களும் வீர மங்கைகளாகவும் , ஒழுக்கத்தில் , கற்பில் உயர்ந்தவர்களாகவும் என்றளவும் இருப்பர். இவர்கள் உயிரே போயினும் வேற்று இனத்தவர்களோடு திருமணமோ (அல்லது ) எந்தவகையான உறவினையும் வெய்து கொள்வது கிடையாது . பெண்களும் , ஆண்களும் சமம் என்பதால் இக்குலத்தில் இருவருமே உழைப்பார்கள் . இது இவ்வினதவர்களின் பெருமையிலும் பெருமை .
 

=> இப்படிப்பட்டவர்களின் திருமணம் ஆதியில் ஒரு வருடம் நடக்குமாம் , வெகு விமர்சியாக அனைத்து சமுதாயதினர்கும் விருந்து , பரிசுகளை அளித்து ராஜ திருமணமாய் நடக்குமாம் . ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு இவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு இன்று அப்படி விமர்சியாக நடை பெறுவது கிடையாது ..
 

=> ஊருக்கு வெளியில் மந்தையில், செடிகளால் கூடாரம் அமைத்து உறுமி மேளம் இசைக்க , தெலுங்கு பாடல்கள் பாட , ஊர் பெரியார் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து வருகிறது .
=> அப்போது மணமக்களை வாழ்த்த வருபவர்களுக்கு 50 வருடம் முன்பு வரை வைரம் , முத்து போன்றவற்றை கொடுப்பார்களாம் அனால் இன்று வறுமையின் காரணமாய் அரிசி , கம்பு போன்ற வற்றை தருகிறார்கள் ..
வறுமை இருந்த போதும் ராஜாக்கள் ராஜாக்களே என்பது இவர்களின் எண்ணம் .
=> வாள், கேடயம் போன்றவற்றை மணமகன் வெய்து இருப்பார் .. இது இவர்களின் வீரத்தை காட்டுகிறது .. சடங்கு , சம்ப்ரதாயம் போன்ற வற்றை இவர்கள் இன்று வரையிலும் நடை முறை படுத்துகிறார்கள் .. இவர்களின் திருமண நிகழ்ச்சிகளில் வேறு ஜாதியினர் அனுமதிக்க பட மாட்டார்கள் . ஐயரை வெய்த்து திருமணம் செய்வது , ஆரியர்களின் சடங்குகளை இன்று அனைத்து சமுதாயமும் செய்யும் நிலையில் இவர்கள் உண்மையான திராவிட இன மக்களாய் பழமையை மதித்து போற்றி அவர்களின் ஆதிக்கத்தையும் விடாமல் இன்று அளவும் வாழுவது இவர்களின் பெருமைக்கு சான்று ..
 

=>இவர்களின் திருமணமே புரட்சி திருமணம் , சுயமரியாதை திருமணம் என்று பெரியோர்களால் பாராட்ட படகூடியவர்கள் இவ்வினத்தை சேர்ந்தவர்கள் ..
=>இது இன்று சில படித்த ஒரு சில கம்பளதார்களால் மீறப்படுகிறது . நம் இனத்தின் அடையாளம் இதுவே என்று எண்ணி இன்றும் பெருன்பான்மயானவர்கள் இவற்றையே நடை முறை படுத்து கிறார்கள் ..
"முத்து முத்து கல்யாணம் தான் கம்பளத்தார் கல்யாணம் தான்
முத்தமிழர் நாட்டினிலே மூத்த குடியின் கல்யாணம் தான் "
என்று கும்மி பாடல் தெற்கு சீமையிலே இவர்களின் திருமணத்தை கண்டு மற்ற இனத்தவர்கள் பாடுவதை இன்றும் கேட்க முடியும் ..

=> சீர்திருத்த திருமணம் செய்யும் இவர்களின் புகழ் நாயுடு புகழ் போல , நாயக்கர் வீரம் போல என்றும் நிலைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா ...

No comments:

Post a Comment